search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் கண்காட்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    வேளாண் கண்காட்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி

    சிவகிரி உதவி வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிராமப்புற விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
    சிவகிரி:

    சிவகிரியில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிராமப்புற விவசாயிகளுக்கு உதவி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வைத்து வேளாண் கண்காட்சி நடைபெற்றது.

     உதவி வேளாண்மை இயக்குனர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம், பூச்சியியல் உதவி பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ், வேளாண் விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் முகமது இஷானுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியில் பல வகையான உயிரி உரங்கள் மற்றும் களையெடுப்பான் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த வேளாண்மை கண்காட்சியில் மாணவி தேன்மொழி திருந்திய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

    இது குறித்த மாதிரியும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பார்வையிட்டனர். வேளாண்மை கண்காட்சியில் மாணவிகள் அனகா, அகிலா, ஆஷிகா, மெட்லின்பெனிஷா, சுகந்தி, ரித்திகா பிரியதர்ஷினி, சரஸ்வதிதேவி, சகிபிரியா, உமா மகேஸ்வரி, சவுந்தர்யா, சினேகா ஆகியோர் மாதிரிகள் குறித்த விளக்கங்களை விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
    Next Story
    ×