search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தககண்காட்சி
    X
    புத்தககண்காட்சி

    திருவள்ளூரில் முதல் முறையாக 110 அரங்குகளில் ஒரு லட்சம் புத்தககண்காட்சி

    திருவள்ளூரில் புத்தக கண்காட்சியை இன்று முதல் வருகிற11- ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்துடன் (பபாசி) இணைந்து புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளது.

    இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காலி மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா நேற்று மாலை பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அமைச்சர் சா.மு.நாசர் புத்தக கண்காட்சி அரங்கத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், திருவள்ளூர் எம்.பி., ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, எம்.எல்.ஏ., க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, சந்திரன், துரைசந்திரசேகர் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புத்தக கண்காட்சியை இன்று முதல் வருகிற11- ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம்.

    மொத்தம் 110 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில், இலக்கியம், மருத்துவம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறை நூல்கள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் என 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. கண்காட்சியையொட்டி நாள்தோறும் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் மற்றும் மாலை நேரங்களில், பாரதிபாஸ்கர், பாரதி கிருஷ்ணகுமார், திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில்சம்பத் உள்ளிட்ட பேச்சாளர்கள், கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் கண்மணி குணசேகரன், மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜன் உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

    Next Story
    ×