search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நியமனக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வை சேர்ந்த கோகுலவாணிக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.
    X
    நியமனக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.வை சேர்ந்த கோகுலவாணிக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

    நெல்லை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த 12-வது வார்டு கவுன்சிலர் தேர்வு

    நெல்லை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினராக 12-வது வார்டை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தேர்வானார்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 

    இதைத்தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்த சரவணன் மேயராகவும், கே.ஆர்.ராஜூ துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட நெல்லை, பாளை, தச்ச நல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களுக்கு மண்டல சேர்மன்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது.

    இதில் தி.மு.க.வை சேர்ந்த 4 பேர் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

    பிற்பகலில் கணக்கு குழு, பொது சுகாதாரக்குழு, கல்விக்குழு, வரிவிதிப்பு குழு, நகரமைப்பு குழு, பணிக்குழு ஆகிய 6 குழுக்களுக்கு உறுப் பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது.இதில் தலா ஒவ்வொரு குழு வுக்கும் 9 உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 

    இதனைத்தொடர்ந்து நியமனக் குழு உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர் தல் மாநகராட்சி அலுவல கத்தில் இன்று நடை பெற்றது.

    இதற்காக 12-வது வார்டை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் கோகுலவாணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

    அவர் வெற்றி பெற்றதற் கான சான்றிதழை மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன், கோகுல வாணியிடம் வழங் கினார் .

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல் லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    இன்று பிற்பகலில் கணக்கு குழு, பொது சுகாதாரக்குழு, கல்விக்குழு, வரிவிதிப்பு குழு, நகரமைப்பு குழு, பணிக்குழுக்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    Next Story
    ×