என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிய போது எடுத்தபடம்.
  X
  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிய போது எடுத்தபடம்.

  முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது- என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
  உடன்குடி:

  உடன்குடி ஊராட்சி ஒன்றியம் பரமன்குறிச்சி அருகே முந்திரித்தோட்டம் பகுதியில் ரூ.8.70 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, உடன்குடி தேரியூரில் புதிய பஸ் நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.

  இந்த புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றிய, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய தாவது:-  

  இந்தியாவிலேயே தமிழகம்தான் பல்வேறு துறைகளிலும் தன்னிறைவு பெற்று முன்னேறிய மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசின் புள்ளி விபரங்களும், மத்திய அமைச்சர்களின் பேட்டிகளும் தெரிவிக்கின்றன.

  தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக துபாய் சென்று வந்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை யால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

   உடன்குடி ஒன்றியத்தில் மக்களுக்கான அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படுகிறது.தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சி ஒன்றியமாக உடன்குடி ஊராட்சி ஒன்றிம் திகழும் வண்ணம் ஒன்றியக்குழு தலைவர் பாலசிங் செயல்பட்டு வருகிறார்.
   
  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து, ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கிறார்.அறிவித்த திட்டங்கள் கிராமப் புறமக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்றுதனி கவனம் செலுத்தி வருகிறார்.

  இவ்வாறு அவர் பேசினார்.
   
  இந்தநிகழ்ச்சிகளுக்கு திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சுவாமிநாதன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், பொற்செழியன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், ஒன்றியக்குழு றுப்பினர்கள் ராமலட்சுமி, மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தி.முக. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடிநகர தி.மு.க. செயலர் ஜான்பாஸ்கர், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, இளங்கோ, ரவிராஜா, சிராஜூதீன், அலாவுதீன், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் அஸ்ஸ்£ப் அலி பாதுஷா, முன்னாள் ஏம்.ஏல்.ஏ அமிர்தராஜ் செட்டியாபத்துகணேசன். ராஜலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×