என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் வர்த்தக சங்க மாவட்ட தலைவர் வைகுண்டராஜா பேசிய போது எடுத்த படம்.
  X
  வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் வர்த்தக சங்க மாவட்ட தலைவர் வைகுண்டராஜா பேசிய போது எடுத்த படம்.

  ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்-வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  கடையநல்லூர்:

  கடையநல்லூர் வர்த்தக சங்கத்தின் 2-வது பொதுக் குழு கூட்டம் கடையநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு இப்ராஹிம் அபு தலைமை தாங்கினார். அப்துல்லா வரவேற்று பேசினார். 

  ஜபருல்லா தொகுப்புரை வழங்கினார். நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார்.  தென்காசி வர்த்தக சங்கத் தலைவர் வைகுண்ட ராஜா  சிறப்புரையாற்றினார்.

  இதில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர்  விஜயகுமார், தென்காசி மாவட்ட செயலாளர் கணேசன் , காஜா மைதீன், ஆடிட்டர் பாத்திமா பிரதர்ஸ், மாவட்ட பொருளாளர் கலை வாணன், மாவட்ட தொகுதி செய லாளர் கணேசன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆய்வா ளர் கனகராஜ் ஆகியோர் உரையாற்றினர். 
   
  பொதுக்குழு கூட்டத்தில் தென்காசி மாவட்ட செய்தி தொடர்பாளர் கந்தசாமி, இமானுவேல் ராஜன், ஆகி யோர் கலந்து கொண்டனர். ஹிதாயத்துல்லா நன்றி கூறினார்.

  இதில் கடையநல்லூரை சேர்ந்த ஏராளமான வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை முழுவதும் தடை செய்ய வேண்டும், வணிகர் களுக்கான நல வாரியம் அமைத்துத் தர வேண்டும், லைசென்ஸ் புதுப்பித்தல் செய்யும் நடைமுறையை எளிமையாக்கி தர வேண்டும். 

   60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு சிறப்பு மாதாந்திர ஓய்வூதியம் தர வேண்டும், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அதிகமாக வெளி ஊர்களில் இருந்து வந்து செல்லும் அரசு மருத்துவ மனை, பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு குளிய லறையுடன் கூடிய பொது கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
  Next Story
  ×