search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி தேரோட்டம்

    திருக்குறுங்குடியில் இன்று அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் அழகியநம்பிராயர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருவுருவங்களில் அருள் பாலித்து வருவது சிறப்புமிக்கதாகும்.

    பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 18-ந் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் தினசரி நம்பிசுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×