search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாதனை படைத்த மாணவிகளை அதிகாரிகள் பாராட்டிய காட்சி.
    X
    சாதனை படைத்த மாணவிகளை அதிகாரிகள் பாராட்டிய காட்சி.

    அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

    சேலம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
    மகுடஞ்சாவடி:

    சேலம்  மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று  நடைபெற்றது. இதில், இளம்பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  மோகனப்பிரியா, மோனிகா, ஹேமதர் ஷினி, விஜயசியாமளா, நர்மதாதேவி உள்ளிட்டோர்  மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றனர். 

    இம்மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைவேலு, ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர்  கழக தலைவர் நிர்மலாசெல்வம் மற்றும்  சக மாணவிகள் பாராட்டினர்.
    Next Story
    ×