search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசி தரம் குறித்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
    X
    அரிசி தரம் குறித்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அங்காடியில் அரிசி தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

    கும்பகோணம் மாநகராட்சியில் அங்காடியில் அரிசி தரம் குறித்து கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

     கும்பகோணம் தாலுகா சோழபுரம் பேரூராட்சியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் மஜுது நகர் பூங்கா அமைக்கும் பணியினை பார்வையிட்டு , 

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 28.40 லட்சம் மதிப்பீட்டில் ஜெயம் நகர் மெயின் ரோடு முதல் சுபிட்சம் நகர் வரை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து திருப்பனந்தாள் ஒன்றியம் ஆரலூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம முன்னோடித் திட்டத்தின் கீழ் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் காலனி புதுத்தெரு சார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கும்பகோணம் மாநகராட்சி சந்திரசேகரபுரம் கூட்டுறவு பொது வினியோக திட்ட அங்காடியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.
    Next Story
    ×