search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 21.50 ஏக்கர் நிலங்களை சென்னை உயர்நீதிமன
    X
    பரமத்திவேலூர் தாலுகாவில் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 21.50 ஏக்கர் நிலங்களை சென்னை உயர்நீதிமன

    பரமத்திவேலூர் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

    பரமத்திவேலூர் காவிரியாற்றில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்டனர்

    பரமத்திவேலூர்:

    நீதி மன்ற உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் அறிவுரை யின் பேரில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன் மற்றும் பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை இளம்பொறியாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அ. பொன்மலர் பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட காவிரி ஆற்றுப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்திருந்த 16 ஏக்கர் நிலங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர்   பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதே போல் கொத்தமங்கலத்தில் காவிரி யாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த 5.50 ஏக்கர் நிலத்தையும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

    மேலும் பாலப்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு என வகைப்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த முக்கால் ஏக்கர் நிலத்தையும் வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் முன்னிலையில் அகற்றப்பட்டது.  ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    Next Story
    ×