search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது.
    X
    பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது.

    கோடீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

    திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
    கும்பகோணம்:

    திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக் கோடீஸ்வரர் கோவிலில் பாடல் பெற்ற வடுகபைரவர், பால சனீஸ்வரர், சித்திரகுப்தர் சன்னதிகள் அமையப் பெற்று துலாபாரம் உடைய சிவத்தலம் என்ற தனிப்பெருமை உடையது. 

    இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகளுடன் பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது. 

    இதில் கோயில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, ஆய்வாளர் கோகிலா தேவி, சிம்சன் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சித்திரைப் பெருவிழா வரும் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

    உற்சவத்தின் 10 நாட்களும் சிறப்பு வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 

    வரும் 13-ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், 15-ம் தேதி தேரோட்டமும், 16-&ம் தேதி சிங்கோத்பவ புஷ்கரணியில் சித்திரை தீர்த்தவாரியும் நடக்கிறது. விழா நாட்களில் வேத, தேவாரபாராயணம், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 

    ஏற்பாடுகளை திருக்கோடிக் காவல், அம்மாபேட்டை கிராம மக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×