என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாகனங்கள் ஏலம் நடந்தபோது எடுத்த படம்.
  X
  வாகனங்கள் ஏலம் நடந்தபோது எடுத்த படம்.

  போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 121 வாகனங்கள் ரூ.27 லட்சத்துக்கு ஏலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 121 வாகனங்கள் ரூ.27 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவு மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மதுவிலக்கு குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 116 இருசக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 121 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. 

  இந்த வாகனங்களின் ஏலம் நேற்று காலை சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

  இந்த ஏலம் மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயந்தி தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

  இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர். இதன்மூலம் அரசுக்கு ரூ.26 லட்சத்து 98 ஆயிரத்து 508 வருமானம் கிடைத்தது.
  Next Story
  ×