என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா பரிசோதனை
  X
  கொரோனா பரிசோதனை

  தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு- 21 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 56 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 390 ஆக உள்ளது. 

  அதிகபட்சமாக சென்னையில் இன்று 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 21 மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இன்று ஒரே நாளில் 106 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது.

  கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது. மாநிலம் முழுவதும் 620 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
  Next Story
  ×