என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  இடைநிலை ஆசிரியர் சங்கம் பொதுக்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இடைநிலை ஆசிரியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
  திருச்சி:

  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மாநகராட்சி அருகே உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

  மாநில பொதுச் செயலாளர் சங்கர், திருச்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  அதனைத் தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பட்டதாரி பணியிடங்களை தரம் உயர்த்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

  நாளை மாவட்ட தலைநகரங்களில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அகில இந்திய அளவில் வருகின்ற 28 தேதி மற்றும் 29ம் தேதிகளில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திரளாக பங்கேற்க வேண்டும்.

  மேலும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற மே மாதம் 2 வது வாரத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
  Next Story
  ×