என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தொட்டியம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உழவர் பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
  X
  தொட்டியம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உழவர் பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

  பருவத்திற்கேற்ற பயிர் ரகங்கள் தேர்வு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொட்டியத்தில் விவசாயிகளுக்கு பருவத்திற்கேற்ற பயிர் ரகங்கள் தேர்வு செய்யும் முறை குறித்த பயிற்சி முகாம் நடை பெற்றது.
  திருச்சி:

  திருச்சி மாவட்டம் தொட்டியத்தில்  தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர்நலத் துறை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் கிராம அளவிலான  விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர்  சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

  திருச்சி மாவட்டம் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் மோகன், வேளாண்மை அலுவலர் ரமேஷ்  ஆகியோர் கலந்து கொண்டு  விவசாயிகளுக்கு தொழில் நுட்ப செய்திகளை அளித்தனர். வட்டார அட்மா தொழில்நுட்ப மேலாளர் வரகுணபாண்டியன்  வரவேற்றார்.  

  வேளாண்மை துணை இயக்குனர் கூட்டுபண்ணை திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடுகள், தேசிய அளவிலான மின்னணு வேளாண்மை விற்பனை மற்றும் சந்தை நுண்ணறிவு பற்றியும்,

  பருவத்திற்கேற்ற பயிர் ரகங்கள் தேர்வு மற்றும் நீர்ப்பாசன  சிக்கன முறைகளைப் பற்றியும்  தெளிவாக வும் விளக்கமாகவும் விவசாயிகளுக்கு  எடுத்துரைத்தார்.  

  வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் பற்றி வேளாண்மை அலுவலர் கௌரிசங்கர் எடுத்துக் கூறினார்.  முடிவில் அட்மா உதவி தொழில் நுட்ப மேலாளர் அனிதா நன்றி கூறினார்.
  Next Story
  ×