என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கோவையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட வாலிபர் திடீர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோவை:

  கோவை சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 30). இவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார்.

  இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்கு வந்த சில நாட்களில் மீண்டும் கஞ்சா புகைக்க தொடங்கினார். இதனால் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தால் கஞ்சா பழக்கத்தை தனது மகன் விட்டு விடுவான் என நினைத்தனர்.

  இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வது என நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். வீட்டில் இருந்த பாலகிருஷ்ணன் திடீரென சென்னைக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×