என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  திருச்சி:


  திருச்சி மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் வந்து கொண்டே இருந்தது அந்த அடிப்படையில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து அரசு அலுவலகங்கள் முக்கியமான அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். 

  அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் திருவெறும்பூரில் மின்வாரிய அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  பின்னர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கூறியதாவது;
  பொது மக்களிடமிருந்து புகார்களை அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கிக் கொண்டால் தப்பிப்பது எளிதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  பொதுமக்கள் எந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களோ அவர்களைப்பற்றி தைரியமாக எங்களை தொடர்பு கொண்டு கூறலாம். உங்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

  கடைநிலை ஊழியர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை யார் தவறு செய்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Next Story
  ×