என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது திருச்சியில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  திருச்சி:

  தமிழகத்தில் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வந்தது. இதில் சென்னையில் ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரத்தில் 3 நாட்கள் கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்டார்.

  அதனைத் தொடர்ந்து திருச்சியில் தங்கி அவர் கையெழுத்திட்டு வருகிறார். இரண்டாவது நாளாக கையெழுத்திடுவதற்காக போலீஸ் நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை வந்தார். அப்போது அவரின் ஆதரவாளர்கள் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திரண்டனர்.

  அதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 143, 153, 504, 269,270 ஆகிய பிரிவுகளின் கீழ் அனுமதியின்றி கூட்டம் சேர்ப்பது, மாஸ்க் அணியாமல் சென்றது, சமூக இடைவெளிகயை கடைப் பிடிக்க தவறியது உள்ளிட்டவற்றிற்காக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


  நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வரும் நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலும் கூடுதலாக 5 பிரிவுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×