search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி பேசியபோது எடுத்தபடம்.
    X
    கூட்டத்தில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி பேசியபோது எடுத்தபடம்.

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்-நகராட்சி சேர்மன் வேண்டுகோள்

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி கூறினார்.
    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி மாவட்டத்தில் வளர்ந்து வரும் மிக முக்கியமான நகராட்சி ஆகும்.

     சுகாதாரமான நகரமாக தொடர்ந்து பாதுகாத்திடவும் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்றிடவும், கசடு, கழிவு மேலாண்மை சம்பந்தமாகவும் அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கமிஷனர் (பொறுப்பு) ஜெயப்பிரியா, துணை சேர்மன் கண்ணன் என்ற ராஜு முன்னிலை வகித்தனர். இதில் பேசிய சேர்மன் உமாமகேஸ்வரி கூறியதாவது:-

    தினமும் தூய்மை பணியாளர் குப்பைகள் வாங்க வரவில்லை என்றாலோ வேறு ஏதேனும் சுகாதார குறைபாடு என்றாலோ பொதுசுகாதார அலுவலகத்தில் நேரில் வந்து தகவல் தெரிவிக்கலாம்.

    அல்லது 04636 222336 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். மேலும் நகராட்சி பகுதியில் ஒருதடவை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கடைகளுக்கு வரும்போது துணிப்பைகள் மற்றும் பாத்திரங்களை கொண்டு வர வியாபாரிகள் வலியுறுத்த வேண்டும் எனவும்.

    வர்த்தக நிறுவனங்கள் மேற்கண்ட விதிகளை நடைமுறைபடுத்த தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து நமது நகரை தூய்மையான நகரமாகவும் திறந்த வெளி பிளாஸ்டிக் இல்லா நகரமாகவும் மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×