search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்கப்பட்ட பசு மாடு
    X
    மீட்கப்பட்ட பசு மாடு

    கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு- தண்ணீர் நிரப்பி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

    பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தட்பெரும்பாக்கம் பகுதியில் பசுமாடு ஒன்று துரைசாமி நகர் வழியாக சென்றது. ஒரு வீட்டின் அருகே சென்ற போது அருகில் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

    இதில் பசுமாட்டின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழிவுநீர் தொட்டி குறுக்கே இருந்ததால் பசுமாட்டால் வெளியே வரமுடிய வில்லை.

    இதனால் பசுமாடு உயிருக்கு போராடியபடி கத்தியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கிய பசுமாட்டை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இது பற்றி பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சுமார் 10 அடிக்கு கீழ் இருந்த பசுமாட்டை மேலே கொண்டு வருவதற்காக கழிவுநீர் தொட்டிக்குள் தண்ணீரை ஊற்றி நிரப்பினர். இதன் பின்னர் தண்ணீரில் மிதந்தபடி பசுமாடு ஓரளவு மேலே வந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பத்தி ரமாக பசுமாட்டை கயிறு கட்டி மீட்டனர். கழிவு நீர் தொட்டிக்குள் சிக்கிய பசுமாட்டை வேகமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×