search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம்
    X
    சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம்

    பழுதடைந்த சாலையால் வாகனங்கள் சேதமடைவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

    திண்டுக்கல் அருகே பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்
    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூரில் மந்த நாயக்கன்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    மந்தநாயக்கன்பட்டியில் இருந்து சிலுவத்தூர் மெயின் ரோடு செல்லும் இணைப்புச் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கப்படுகிறது.

    இந்த வழியாக தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பல்வேறு அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் அவசர தேவை அந்த சாலையில் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சவுந்தர் கூறியதாவது
    எங்கள் பகுதியில் உள்ள இணைப்பு சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகின்றன.இது மட்டுமின்றி மாணவ, மாணவிகள் உள்பட பாதசாரிகள் நடந்து செல்லும்போது, சாலையில் உள்ள பள்ளங்களால் கால் தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

    மழைக்காலத்தில் அந்த சாலையை பயன்படுத்தவே முடியாத நிலை காணப்படுகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என கூறினார்.
    Next Story
    ×