என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வரதட்சணை கொடுமை
  X
  வரதட்சணை கொடுமை

  கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தல்- 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள துணை தாசில்தார் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் சேலை காமராஜ புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவரது மகன் ராஜேஷ்குமார் வயது (39). இவர் திருத்தணியில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ராஜேஷ்குமார் பூந்தமல்லி இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த நிவேதா (வயது 32) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் திருமணத்தின் போது நிவேதாவின் பெற்றோர்கள் சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர்.இருப்பினும் திருமணத்திற்குப் பின்னர் ராஜேஷ்குமார் அவரது தாயார் வைஜெயந்தி மாலா, அவரது சகோதரர் பிரேம்குமார்( 42) ஆகிய 3 பேரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து துன்புறுத்தி வந்தனர். இதுகுறித்து நிவேதா தன் பெற்றோரிடம் கூறி அழுது புலம்பி வந்துள்ளார். அவர்கள் நிவேதாவுக்கு சமாதானம் செய்து தேற்றி கண்டனர். நிவேதாவின் பெற்றோர்கள் ராஜேஷ்குமாரை நாடி இது தொடர்பாக கேட்டபோது ராஜேஷ்குமார் தனது தாய் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து அவர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர்.மேலும் அவர்கள் நிவேதாவையும் அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த நிவேதா தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்யும் கணவர் ராஜேஷ்குமார் அவரது தாய் வைஜெயந்தி மாலா, பிரேம்குமார் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக மேற்கண்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×