search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி பாராளுமன்ற எம்பி விஜய் வசந்த்
    X
    குமரி பாராளுமன்ற எம்பி விஜய் வசந்த்

    காமராஜர் விருதுப் பெற்ற குமரி அனந்தனுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு 2021-ம் ஆண்டுக்கான காமராஜர் விருதினை தமிழக அரசு வழங்கியது. விருது வழங்கிய தமிழக அரசுக்கு குமரி பாராளுமன்ற எம்.பி விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

    குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது வழங்கிய முக ஸ்டாலின்

    இதுகுறித்து அரசுக்கு குமரி பாராளுமன்ற எம்.பி விஜய் வசந்த் மேலும் கூறியதாவது:-     

    2021 ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எனது பெரியப்பாவுமான குமரி அனந்தன் அவர்களுக்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விருதினை வழங்கிய தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
    Next Story
    ×