search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,   கொரோனா பரிசோதனை
    X
    டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததற்கு மக்கள் ஒத்துழைப்பே காரணம்- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

    தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 30-ந் தேதி அன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது. அடுத்த நாளே பாதிப்பு 100-ஐ கடந்தது. அதையடுத்து தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-க்கும் மேல் இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கியதால் தற்போது கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×