search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயில்
    X
    வெயில்

    கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

    வீடுகளில் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. சில நேரங்களில் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அதனையும் தாண்டி வெப்பம் தெரிகிறது.

    குளிர்ச்சியான உணவுகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்வது உகந்ததாக இருக்கும் என டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

    பொதுவாக பிப்ரவரி மாதம் முடிந்தபிறகு மார்ச் மாதத்தில் சம்மர் சீசன் எனப்படும் வெப்பம் மிகுந்த காலம் தொடங்கி விடும்.மார்ச் மாதத்தில் குறிப்பிட்ட அளவு வெப்பம் மட்டுமே காணப்படும். அதன்பின்னர் படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிக அதிகப்படியான வெப்பம் பதிவாகும். கடந்த வருடம் கூட 40 முதல் 47 டிகிரி செல்சியஸ் அளவிற்கே வெப்பமானது பதிவாகியது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே கோவை போன்ற நகரங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகி வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதையே மக்கள் சற்று குறைத்து விட்டனர். அந்தளவுக்கு வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது.

    வீடுகளில் மின்விசிறி இல்லாமல் இருக்க முடியாது. சில நேரங்களில் மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அதனையும் தாண்டி வெப்பம் தெரிகிறது.வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் மண்பானை யில் தண்ணீர், தர்ப்பூசணி, ஜூஸ், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை தேடி அருந்தி வருகிறார்கள்.

    வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்வதற்கு மருத்துவர்கள் சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, வெப்ப காலம் அதிகரித்து வருவதால் குளிர்ச்சியான உணவுகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்வது உகந்ததாக இருக்கும். மேலும் பருத்தி ஆடைகள் உடுத்துவது, இறுக்கமான ஆடைகளை பயன்படுத்தாமல் இருப்பது, வெப்பம் ஊடுருவாத ஆடைகளை அணிவது மூலம் அதிக உஷ்ணம் ஏற்படாமல் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

    மேலும் அதிகளவு நீர் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தர்பூசணி, வெள்ளரி, எலுமிச்சை சாறு, கிர்ணிப்பழம் ஆகியவை உடல் சூட்டை குறைக்கக் கூடியவை. எனவே பொதுமக்கள் அதனை பழமாகவும், பழச்சாறாகவும் உட்கொள்வது சிறந்ததாகும். இறைச்சி உண்பதை போதுமான அளவு கட்டுப்படுத்திக் கொள்வது போன்றவை வெப்ப காலத்தில் பொதுமக்கள் அதிக சூட்டை உணராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றனர்.
    Next Story
    ×