என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  கோவையில் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
  கோவை:

  கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப் புதூரை சேர்ந்தவர் தம்புராஜ். இவரது மனைவி  சுகுணா (வயது 82).இன்று காலை இவர் தன் வீட்டின் முன்பு வளர்க்கும் செடிகளுக்கு களையெடுத்துக் கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மூதாடியின் அருகே வந்து முகவரி கேட்பது போல் நடித்து கழுத்தில் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகை பறித்து தப்பிச்சென்றனர்.

  இதில் அதிர்ச்சியடைந்த சுகுணா அத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த  கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சுகுணா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். 

  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த  பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×