search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன்,  ரெயில்வே துணை பொதுமேலாளரிடம்   மனு அளித்த காட்சி.
    X
    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், ரெயில்வே துணை பொதுமேலாளரிடம் மனு அளித்த காட்சி.

    நெல்லை, தென்காசி வழியாக -சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்-தி.மு.க. மாவட்ட செயலாளர் கோரிக்கை

    நெல்லை, தென்காசி வழியாக -சென்னைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தென்னக ரெயில்வே துணை பொது மேலாளர் மல்லையாவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தென்னக ரெயில்வே துணை பொது மேலாளர் மல்லையாவை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு உள்ளதால் தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், நெல்லையில் இருந்து வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னைக்கும், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கும் ரெயில்களை உடனடியாக இயக்க வேண்டும்.

    இதற்காக நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தாதர் மற்றும் பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் ரெயில்வேக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    அப்போது, மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, குற்றாலம் பேரூராட்சி கவுன்சிலர் கிருஷ்ணா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமித்துரை ஆகியோர் உடனிருந்தனர்.  
     
    மனுவை பெற்றுக்கொண்ட பொது துணை மேலாளர், பொது மேலாளரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ரெயில்வேக்கு வருமானம் வரக்கூடிய வழித்தடம்தான் என்றும், உங்கள் கோரிக்கை நியாயமானது தான் என்றும் தெரிவித்தார்.
    Next Story
    ×