என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சேலத்தில் சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
  சேலம்:

  சேலம் ஜாரி கொண்ட லாம்பட்டி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந் தன். இவரது மனைவி கலையரசி (வயது 65). 

  இவர் இன்று காலை 10.30 மணி அளவில்  கொண்ட லாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது  சாலையை கடக்க முயன்றார். 

  அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கலையரசி மீது  மோதியது. 

  இதில் தூக்கி வீசப்பட்ட கலையரசி தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசிமதியம் 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்த புகாரின்பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த முத்து மகன் பிரகாஷ் (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×