search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூரை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே திரும்பியபோது
    X
    திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூரை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே திரும்பியபோது

    திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

    திருச்சி, திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்ட கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு
    திருச்சி :

    திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருமண்டபம்  பகுதியில் இருந்து ராம்ஜிநகர் வரை ஏராளமான கார் கம்பெனிகள், டிராக்டர் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நிறுவனங்களுக்கு வட மாநிலங்களில் இருந்து மிகப்பெரிய கண்டெய்னர் லாரிகளில் வாகனங்கள் கொண்டு    வரப்படுகிறது. அவ்வாறு  வரும்  பெரும்பாலான  வாகனங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வெளியில்   சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    ஏற்கனவே பெயரளவிற்கு மட்டும் தேசிய நெடுஞ்சாலையாக கருதப்படும் திருச்சி& திண்டுக்கல் சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல்  என்பது  தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதற்கிடையே இதுபோன்ற கண்டெய்னர்    லாரிகளும் சாலையோரங்களில் குறிப்பாக  தீரன்  நகர்  பகுதியில் இருந்து  ராம்ஜிநகர்  வரை ஆங்காங்கே  நிறுத்தப்படுவ தால் விபத்துகளுக்கும் முக்கிய காரணமாகி விடுகிறது.

    வடமாநிலங்களை சேர்ந்த லாரி டிரைவர்கள் இங்குள்ள போக்குவரத்து நெரிசல் குறித்தோ, விபத்துகளுக்கான காரணம் பற்றியோ தெரிந்து கொள்வதும்  இல்லை,  கவ லைப்படுவதும்    இல்லை. தங்கள்  தேவை  பூர்த்தியா னால் போதும் என்று இருந்து விடுகிறார்கள்.

    அந்த  வகையில்  இன்று காலை சுமார் 6.30 மணியளவில்  பிராட்டியூரை  எடுத்த புங்கனூர் பிரிவு சாலையான  வட்டார  போக்குவ ரத்து  அலுவலகம்  அருகே சாலையில் திருப்ப முயன்ற நீளமான    கண்டெய்னர் லாரி   ஒன்று   பள்ளத்தில் இறங்கியபோது     சிக்கிக் கொண்டது.

    நடுரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு  சாலையை அடைத்துக்கொண்டு நின்ற லாரியால்   அந்த பகுதியில் போக்குவரத்து  என்பது ஒருவழியாக மாற்றப்பட்டது. காலை நேரத்தில் அந்த வழி யாக காந்தி மார்க்கெட் செல் லும்   கடை  வியாபாரிகள், வேலைக்கு   செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    சுமார்  2  மணி நேர போராட்டத்துக்கு  பின்னர் அந்த லாரி அங்கிருந்து அப்பு றப்படுத்தப்பட்டது. அதன் பிறகே திருச்சி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து சீரனாது. வரும் காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழியாக சென்று வந்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.
    Next Story
    ×