என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரவிந்த் கெஜ்ரிவால்- கமல்ஹாசன்
  X
  அரவிந்த் கெஜ்ரிவால்- கமல்ஹாசன்

  பஞ்சாபில் அசுர வெற்றி- அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டிய கமல்ஹாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
  சென்னை:

  உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்காக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் 4 மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

  இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.

  இந்த நிலையில், பஞ்சாபில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளர்.

  இதுதொடர்பா அவர் டுவிட்டரில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  Next Story
  ×