என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குஷ்பு
  X
  குஷ்பு

  மக்கள் பா.ஜனதா பக்கம் இருக்கிறார்கள்- குஷ்பு மகிழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்கள் தங்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம் என்று பா.ஜனதா பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு நடிகையும், பா.ஜனதா பிரமுகருமான குஷ்பு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

  இதுகுறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், ‘’தேர்தலில் ஒவ்வொரு காரிய கர்த்தாவும் தன்னார்வலர்களும் அடிமட்டம் வரை கடுமையாக உழைத்து பிரதமர் நரேந்திரமோடியின் கொள்கைகளையும் திட்டங்களையும் வாக்குறுதிகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அவர்களுக்கு நன்றி. இந்த வெற்றி நீங்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை. மக்கள் பா.ஜனதா பக்கம் இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

  பிரதமர் நரேந்திரமோடி மீதும் கட்சி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தடுத்து நிறுத்த முடியாது. காங்கிரஸ் கட்சி மேலும் சிதைந்து விட்டது. மக்கள் தங்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள். பா.ஜனதாவில் உள்ள நாங்கள் அதை செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
  Next Story
  ×