என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 2 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று அதிகபட்சமாக 44 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 129 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரம் 147-ஆக பதிவாகி இருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,51,300 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக 44 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1676-ஆக குறைந்துள்ளது. 354 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.
இதையும் படியுங்கள்.. தாம்பரம் கமிஷனர் ரவி உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு
Next Story