என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் நிழற்கூரை அமைக்கும் பணி தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயணிகளும், பஸ்களும் தொடர்ந்து வெயிலால் கடும் அவதிக்குள்ளாகினர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான புது பஸ் நிலையம் பி.என்., ரோட்டில் உள்ளது. தற்போது இந்த பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பஸ்கள் நிற்கும் ரேக்குகளில் நிழற்கூரை அமைக்கும் வகையில் திட்டமிட்டு பணி துவங்கியது.

  இதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டது. அதன் பின்னும் மாதக்கணக்கில் பணி தொடராமல் கிடப்பில் கிடந்தது.பயணிகளும், பஸ்களும் தொடர்ந்து வெயிலால் கடும் அவதிக்குள்ளாகினர். இதையறிந்த மாநகராட்சி நிர்வாகம், நிறுத்தப்பட்டிருந்த பணிகளை மீண்டும் தொடங்கியது. 

  மேற்கூரைக்கு குழாய் பதித்த இடத்தில் கூலிங் ஷீட் கூரை பொருத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது. இந்த பணி முழுமையாக நிறைவடையும் நிலையில் பஸ்களும், அதில் அமரும் பயணிகளும் வெயில், மழை போன்றவற்றால் பாதிக்கப்படும் நிலை தவிர்க்கப்படும்.
  Next Story
  ×