என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொடைக்கானல் அப்சர்வேட்டரி துணை அணை பராமரிப்பு பணியை நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்
  X
  கொடைக்கானல் அப்சர்வேட்டரி துணை அணை பராமரிப்பு பணியை நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்

  கொடைக்கானல் அப்சர்வேட்டரி அணை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் அப்சர்வேட்டரி அணை மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
  கொடைக்கானல்:

  கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் பிரதானமாக வழங்குவது அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள துணை அணையாகும்.

  கொடைக்கானலில் வருடத்தில் அதிக அளவு மழை பெய்தபோதிலும் அணைகளில் போதிய அளவு தண்ணீர் தேக்க முடியாததால் கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. எனவே அணையை பலப்படுத்தி தடுப்புகளை மேம்படுத்தி கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

  இதனை தொடர்ந்து அணையை மேம்படுத்த நகராட்சி மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. அணையின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகர்மன்றத்தலைவர் செல்லத் துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், பொறி யாளர் மற்றும் நகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

  அணை பலப்படுத்தப்பட்டு கூடுதல் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×