என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிவசங்கர் பாபா
  X
  சிவசங்கர் பாபா

  பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு இன்று மருத்துவ பரிசோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த ஒன்பது மாதங்களாக நீதிமன்ற காவலில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி டேராடூன் அருகே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

  இதையடுத்து அவரால் பாதிக்கப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவிகள் அடுத்தடுத்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

  இந்த வழக்குகளில் சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள், வார்டன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

  அடுத்தடுத்து மொத்தம் 6 போக்சோ வழக்குகளும், 2 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டன.

  கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நீதிமன்ற காவலில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்த நிலையில் எட்டாவதாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்றுஅவருக்கு மருத்துவ பரிசோதனை  செய்யப்படுகிறது.

  மருத்துவ தடய( medical forensic) அறிவியல் டாக்டர்கள் இன்று 11.30 மணிக்கு சிவசங்கர் பாபாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.

  இது தொடர்பான மருத்துவ அறிக்கை வந்தவுடன் அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

  Next Story
  ×