என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பங்குனி திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்8 March 2022 11:07 AM GMT (Updated: 8 March 2022 11:07 AM GMT)
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.
திருப்பரங்குன்றம்,
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்திபெற்றது பங்குனி திருவிழா.
ஆண்டுதோறும் 15நாட்கள் இந்தவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு முருகப்பெருமான் முன்னிலையில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தர்பை, புல், மா இலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விழாவினை முன்னிட்டு முருகன், தெய்வானையோடு தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை, அன்ன வாகனம், பூத வாகனம், தங்க மயில்வாகனம், வெள்ளி யானைவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் 5ம் நாள் நிகழ்ச்சியாக கைபார நிகழ்ச்சி நடைபெறும். 17ந்தேதி பவுர்ணமி சிறப்பு பூஜையும், 18ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவும், 20ந்தேதி இரவு 7 மணிக்கு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 21ந்தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான்&தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
22ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்காக காலை ஆறு மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளி கிரிவீதி வழியாக சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X