search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பள்ளிகளில் மாணவர்களுக்கு கூட்டு உடற்பயிற்சி

    மீண்டும் ஒவ்வொரு வாரமும் பள்ளிகளில் கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
    திருப்பூர்:

    அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக நடத்த வெள்ளிதோறும் மாலை நேர கூட்டுஉடற்பயிற்சி 3 ஆண்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் நடைபெற்று வந்த கூட்டு உடற்பயிற்சி கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டது.

    தற்போது முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உலக உடற்திறனாய்வு தேர்வு நடத்த வேண்டும். மீண்டும் ஒவ்வொரு வாரமும் பள்ளிகளில் கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×