என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆற்றில் மூழ்கி திருப்பத்தூர் பிளஸ்-1 மாணவி உயிரிழந்த பரிதாபம்
Byமாலை மலர்8 March 2022 10:41 AM GMT (Updated: 8 March 2022 10:41 AM GMT)
ஆற்றில் மூழ்கி திருப்பத்தூர் பிளஸ்-1 மாணவி உயிரிழந்தார்.
பென்னாகரம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. அரசு பஸ் கண்டக்டர். இவரது மகள் ஜனனி (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-&1 படித்து வந்தார். மாணவியின் பாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.
இதையடுத்து இறந்த பாட்டியின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்காக பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாணவி நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்தார். அவர்கள் முதலைப் பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் வளர்மதி மற்றும் உறவினர்கள் மாணவியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர்கள் ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று உள்ளூர் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் மாணவி ஜனனியின் உடலை தேடினர்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியின் இறுதி சடங்கிற்காக பெற் றோருடன் சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×