என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வி.கே.புரத்தில் மர்மச்சாவு- வாலிபர் உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்
Byமாலை மலர்8 March 2022 10:33 AM GMT (Updated: 8 March 2022 10:33 AM GMT)
வி.கே.புரத்தில் மர்மமான முறையில் இறந்த வாலிபர் உடலை வாங்க அவரது உறவினர்கள் 4-வது நாளாக மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
வி.கே.புரம் அருகே உள்ள செட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் மாரி சேகர் (வயது 24 ).
இவர் கடந்த 4-ந் தேதி செட்டிமேடு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக அவரது சகோதரர் கண்ணதாசன் வி.கே.புரம் போலீசில் கொடுத்த மனுவில் , தனது சகோதரரை தேர்தல் முன்விரோதத்தில் ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துவிட்டதாகவும், இந்த சம்பவத்தில் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.
மேலும், மாரி சேகரின் இறப்பை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் கடந்த 3 நாட்களாக அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கலெக்டர் அலுவலகத்திலும் வந்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி மனு அளித்தனர்.
இதற்கிடையே மாரி சேகர் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவரது உடலில் விபத்தினால் ஏற்பட்ட காயங்களே இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று 4-வது நாளாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே போலீசார் விபத்து ஏற்படுத்தியதாக வேம்பையாபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி,மதனகோபால், ஆனந்தகுமார், தங்கமாரி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
மாரி சேகர் சம்பவம் நடந்த அன்று மோட்டார் சைக்கிளில் வந்தபோது கும்பலில் ஒருவர் அவரை கையை காட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தச் சொன்னதாகவும் , அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மாரி சேகர் சற்று விலகி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் முழுமையான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X