என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா, போதைப்பொருள் கடத்திய 7 பேர் கைது- 76 கிலோ கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்8 March 2022 10:18 AM GMT (Updated: 8 March 2022 10:18 AM GMT)
வேனில் கஞ்சா கடத்தி வந்த பூந்தமல்லியை சேர்ந்த பிரதீப்ராஜ், விஜயபுரம் மாவட்டம் கீழிதயாளத்தை சேர்ந்த வரதராஜு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
சென்னை:
சென்னையில் போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன் பேரில் புது வண்ணாரப்பேட்டை போலீசார் வ.உ.சி.நகர் ரெயில் நிலையம் அருகில் கண்காணித்தபோது, சந்தேகத்திற்கு இடமாக பையுடன் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அவரது பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா மற்றும் போதை பவுடர் வைத்திருந்தது தெரிய வந்தது. அவரது பெயர் ரோகித் மணிகண்டன். புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆர்.கே.நகர் போலீசார், ஆர்.கே.நகர், ஐ.ஓ.சி. பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள புதர் அருகில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் நைட்ரோவிட் என்ற மாத்திரைகள் ஏராளமாக இருந்தது தெரிய வந்தது. அதை போதைக்காக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 1,101 நைட்ரோவிட் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள ரமேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமை செயலக குடியிருப்பு போலீசார் நியூ ஆவடி ரோடு, ஆஸ்பிரியன் கார்டன் சந்திப்பு அருகில் கண்காணித்து சந்தேகத்திற்கிடமாக வந்த வேனை நிறுத்தியபோது, ஒரு நபர் வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார். வாகனத்தில் இருந்த மற்ற 2 பேரை பிடித்து வாகனத்தை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
வேனில் கஞ்சா கடத்தி வந்த பூந்தமல்லியை சேர்ந்த பிரதீப்ராஜ், விஜயபுரம் மாவட்டம் கீழிதயாளத்தை சேர்ந்த வரதராஜு ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62½ கிலோ கஞ்சா மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு போலீசார், சேத்துப்பட்டு குருசாமி பாலம், மெக்நிக்கல் ரோடு 3-வது சந்து அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை விசாரணை செய்தபோது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஆந்திராவை சேர்ந்த ஷேக் மொய்தீன் பாட்ஷா, துர்கா பிரசாத், லோகநாதன் துர்கா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Next Story
×