என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
Byமாலை மலர்8 March 2022 9:35 AM GMT (Updated: 8 March 2022 9:35 AM GMT)
எந்தச் சூழ்நிலையிலும் மேகதாது அணை கட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும்தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு மறுத்து வருகின்ற நிலையில், உபரி நீர்தான் தமிழ்நாட்டை வந்தடைகிறது. இந்த உபரி நீரையும் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று தேசிய கட்சிகள் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
மேகதாது அணை கட்டப்பட்டால், காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீரும் நின்றுவிடும் சூழ்நிலை ஏற்படும் என்பதும், காவேரி நீரை நம்பி விவசாயம் செய்யும் வேளாண் பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதும், வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என்பதும், இன்னும் சொல்லப்போனால், வேளாண் தொழிலே முடங்கும் சூழ்நிலை உருவாகும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
எந்தச் சூழ்நிலையிலும் மேகதாது அணை கட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும்தான் தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×