என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்தபோது மின் ஊழியர் உடலில் தீப்பிடித்தது
Byமாலை மலர்8 March 2022 9:14 AM GMT (Updated: 8 March 2022 9:14 AM GMT)
பொன்னேரி அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்தபோது மின் ஊழியர் உடலில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 50). இவர் மெதூர் பகுதியில் உள்ள மின் பகிர்மான நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை திருப்பாலைவனம் அடுத்த காஞ்சி வாயில் கிராமத்தில் மின் தடை ஏற்பட்டது. இதனை சரி செய்ய வரதராஜன் சென்றார். அவர் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் அமர்ந்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் வரதராஜனின் உடலில் திடீரென தீப்பற்றியது. இதில் உடல் கருகிய நிலையில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு வரதராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×