என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பத்மநாபபுரம் நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் அண்ணா சிலைக்கு மாலை
Byமாலை மலர்8 March 2022 8:01 AM GMT (Updated: 8 March 2022 8:01 AM GMT)
பத்மநாபபுரம் நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கன்னியாகுமரி:
பத்மநாதபுரம் நகராட்சி தலைவர் மற்றும் துணைச் தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்ஜினீயர் அருள் சோபன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் துணைச் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நகர செயலாளர் மணி வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து மாலையில் வெற்றி பெற்ற திமுகவினர் ஊர்வலமாக சென்று பட்டாசு முழங்க அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். இதில் பத்மநாதபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், துணைச் தலைவர் மணி , கவுன்சிலர்கள் ஜெயசுதா, சுலேகா பேகம், அபிஷா, சுகந்தி, ஜெமிலா ராணி மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் சபீனா, நாதிரா பானு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க. பிரமுகர் எட்ரின், மில்டன், அனீஷ், ஆல்பர்ட், பொன் குமாரசுவாமி , குமார் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
மணலி 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவர் பொறுப்பை ஏற்ற அருள் சோபன் நண்பர்கள், தொண்டர்கள் உறவினர்கள் ஆதரவுடன் மணலி வார்டிலுள்ள மக்களை சந்தித்து இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தார்.
Next Story
×