search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காருபாறை உலகளந்தாள் அம்மன் கோவில்
    X
    காருபாறை உலகளந்தாள் அம்மன் கோவில்

    காருபாறை உலகளந்தாள் அம்மன் கோவில் திருவிழா

    காருபாறை உலகளந்தாள் அம்மன் கோவில் திருவிழா நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது
    கன்னியாகுமரி:

    காருபாறை அருள்மிகு உலகளந்தாள் அம்மன் திருக்கோவில் மாசி மகோற்சவ திருவிழா நாளை 8-ந் தேதி தொடங்குகிறது. விழா தொடர்ந்து 10-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    விழாவினையொட்டி 8-ம் தேதி மாலை 4 மணிக்கு திருநடை திறத்தலும் மாலை 4.30 மணி முதல் சிவபுராணம் ஓதுதலும் மாலை 5 மணிமுதல் சுவாமி கும்ப நீராடலும் இரவு 8 மணிக்கு தீபாராதனையும் அதனையொட்டி வாண வேடிக்கையும் தொடர்ந்து 8.30 மணிக்கு வில்லிசையும் பின்னர் கர காட்டம் நடக்கிறது.

    9-ந் தேதி காலை 5 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும் தொடர்ந்து 8 முதல் 10 மணி வரை வில்லிசையும் பின்னர் நோன்பு வழிபாடும் பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராடுதல் அதனையொட்டி இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சியும் தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.  இரவு 8 மணிக்கு பரிசு வழங்குதல் நடக்கிறது.

    பரிசு வழங்குதல் நிகழ்ச்சியில் காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர் சுரேந்திர குமார், நாடார் மகாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்.

    10-ந் தேதி 5.30 முதல் பொங்கல் இடுதலும் தொடர்ந்து தீபாராதனையும் வில்லிலசையும் பின்னர் அலங்கார தீபாராதனையும் அன்னதானமும் நடக்கிறது விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×