என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழாவில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சங்க மாநிலத்தலைவர் சண்முகராஜன் நினைவுப்பரிசு வழங்கினார்.
  X
  விழாவில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சங்க மாநிலத்தலைவர் சண்முகராஜன் நினைவுப்பரிசு வழங்கினார்.

  அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுக்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
  திருச்சி:

  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள்  பதவியேற்பு  விழா திருச்சியில் ராசி மகாலில் நடைபெற்றது. 

  கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். 

  அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, தொ.மு.ச. மாநில பொதுச்செயலாளர் சண்மு கம் எம்.பி., மேயர் அன்பழகன், எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்க தலைவர் ராஜா ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். 

  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நூற்றாண்டு விழாவை வருகிற ஜூன் மாதம் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்து நடத்துவது, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அமல்படுத்த வேண்டும், 

  தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு  திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும், ஜனவரி 2017-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட 7-வது ஊதியக்குழு வின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், 

  தமிழக அரசு அலுவலர்களின் ஊதிய குறைபாடுகளை களைய ஒருநபர் குழுவை அமைத்திட வேண்டும், தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசின் மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சிகளில் பணிபுரியம்  அனைத்து பணியாளர்களையும் அரசு அலுவலர்களாக  கருதிட வேண்டும்  என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

  மேலும் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பொறுப்பேற்று கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர்  வி.ஏ.ஓ. அருள்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நூலகத்துறை, அமைச்சுப்பணியா ளர், கல்வித்துறை போன்ற அனைத்து சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×