என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாராயத்தை போலீசார் கீழே ஊற்றி அழித்ததையும், கைதான வெற்றிவேல்.
  X
  சாராயத்தை போலீசார் கீழே ஊற்றி அழித்ததையும், கைதான வெற்றிவேல்.

  பாண்டி சாராயம் கடத்தி வந்த வியாபாரி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டி அருகே பாண்டிசேரி சாராயம் கடத்தி வந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி அருகே  கொக்கவாடி அரக்கரை வீரன் கோவில் பின்புறம் உள்ள ஈடுகாடு அருகில் பாண்டிசேரி சாராயம் விற்பனைக்காக பைக்கில் கடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய  தகவலின் பேரில் அப்பகுதிக்கு இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் புஷ்பநாதன், காவலர்கள் பாலமுருகன், முத்துமணி ஆகியோர் சென்றனர்.

  அப்போது அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை நிற சாக்கு மூட்டையுடன் வந்த ஒருவரை   நிறுத்த முயன்றபோது அவர் தப்பியோட முயன்றார்.
  அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது கொக்கலாடி மெயின்ரோடு கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(51)  என்பது தெரியவந்தது. சாக்கு மூட்டையை சோதனையிட்டதில் அதில் பாண்டிச்சேரி சாராயம் சுமார் 40 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 பாலிதீன் பைகளில் தலா 30 லிட்டர் வீதமும், 1 பாலிதீன் பையில் 20 லிட்டர் வீதமும் மொத்தம் 110 லிட்டர் இருந்தது.
   
  மேலும் விசாரணை மேற்கொண்டதில் நாகூர் அருகே வாஞ்சூரில் இருந்து வாங்கி வந்து  விற்பனை செய்வதற்காக போதை மருந்து கலந்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
  இதையடுத்து அவரை கைது செய்து 110 லிட்டர் பாண்டி சாராயத்தை கைப்பற்றி அங்கேயே கீழே ஊற்றி அழித்தனர்.
  Next Story
  ×