search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் பொது வேலைநிறுத்தம் குறித்து ஆயத்தக்கூட்டம்

    மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும்.
    திருப்பூர்:

    மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28, 29-ந்தேதிகளில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர்  மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர்  என்.சேகர் தலைமை வகித்தார்.

    இதில் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட  தொகுப்புகளையும், மின்சார சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-ந்தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    இந்த வேலை நிறுத்தத்தை திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்யும் வகையில் துறை வாரியாக கூட்டங்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி, எம்.எல்.எப்., எல்பிஎப், எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 
    Next Story
    ×