என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சத்திரம் பேருந்து பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
  X
  சத்திரம் பேருந்து பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

  சத்திரம் பேருந்து பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்திரம் பேருந்து பகுதியில் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துவருகின்றனர்.
  திருச்சி:

  திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை மேம்படுத்த 2019&ல் ரூ.28.24 கோடி நிதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகள் கட்டுமான பணிகள் நடந்தன. கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் அவ்வப்போது கட்டுமான பணிகள் தடைபட்டன. அதன் பின்னர் ஒருவழியாக கடந்த  ஜனவரியில்  புதிய பஸ்  நிலையம்  மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 

  இந்த பஸ் நிலையம் 11 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில்   அமைந்துள்ளது. ஆனால்  திறப்பு  விழாவுக்கு பின்னரும்  பஸ்  நிலையத்துக்கு வெளியே சாலையில் நிறுத்தப்படும் பஸ்களால் தினந்தோறும் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக  புகார் எழுந்துள்ளது.
   
  பெரும்பாலான  பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் நிறுத்தப்படுகின்றன. குழுமணி, உறையூர், தில்லைநகர், ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள்  வெளியில் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பஸ்கள் சாலையின் 50 சதவீத இடத்தையும் ஆக்கிரமிக்கிறது. 

  இதனால் புனித ஜோசப் கல்லூரியில் இருந்து காமராஜர் சிலை வரை போக்கு வரத்து  நெருக்கடி   ஏற்படுகிறது.  இதுபற்றி,  மெயின் கார்டு கேட் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவர் கூறும் போது,  சில  டிரைவர்கள் முன்பு போல பஸ்சை நடு ரோட்டில்  நிறுத்தி  பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள். போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

  தனியார் பஸ்  டிரைவர்கள் கூறும்போது, புதிய பஸ் நிலையத்திலும் வசதி குறைபாடுகள்   உள்ளன.  வேறு வழியில்லாத  நேரங்களில் சாலையில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டி இருக்கிறது என்றனர்.   

  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாகவே ஒரு சில தனியார் பஸ் டிரைவர்கள் ரேக்கில்  பஸ்சை   கொண்டு வந்து நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் உடனே இயக்க வேண்டிய பஸ் சின் டிரைவர்கள் பஸ் நிலையத்துக்கு வெளியில் நிறுத்துகிறார்கள். 

  புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரத்தை சரியாக பின்பற்றாமல் பஸ்சை நிறுத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும்  150  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

  ரூ.28 கோடி செலவழித்து சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்தும் காட்சிகள் மாறாமல்  தொடர்ந்து போக்குவரத்து   நெரிசலே நீடித்து வருவது வாகன ஓட்டிகளை தவிக்க வைத்து வருகிறது.
  Next Story
  ×