என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நிறைவு
திருபாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நிறைவு பெற்றது.
பாபநாசம்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 19&வது தலமான திருப்பாலை துறையில் தவள வெண்ணகை அம்பாள் பாலைவன நாதர் சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலை துறை அனுமதியுடன் பாபநாசம் ஆன்மீக பேரவை சார்பில் 8ம் ஆண்டு திருப்பாலைத்துறை நாட்டியாஞ்சலி நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மும்பை, சென்னை, புதுச்சேரி, தும்கூர், பெங்களூர், திருவனந்தபுரம், காஞ்சிபுரம், பாபநாசம் ஆகிய ஊர்களில் இருந்து 250 பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரத நாட்டிய கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரத நாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
Next Story