என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்.
  X
  பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்.

  மாசித்திருவிழா தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேலூர் அருகே உள்ள பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது.
  மேலூர்

  மேலூர் அருகே உள்ள குன்னாரம்பட்டியில் மந்தை பகவதிஅம்மன் கோவில்  உள்ளது. இந்த கோவிலில் மாசி  திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். 

  திருவிழாவை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு வைத்தனர். இரவில் தேரோட்டம் நடந்தது.  முன்னதாக 150க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். 

  திருவிழாவைகாண மேலூர், கொட்டாம்பட்டி குன்னாரம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கொட்டாம்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

  Next Story
  ×