search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி
    X
    கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி

    திண்டுக்கல் அருகே 1008 சிவலிங்கம் பிரதிஷ்டை

    திண்டுக்கல் அருகே சிவலிங்கம் பிரதிஷ்டை மற்றும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    குள்ளனம்பட்டி, மார்ச்:

    திண்டுக்கல் அருகே காம்பார்பட்டியில் ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்க பிரதிஷ்டை மற்றும் புவனேஸ்வரி அம்மன் உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் ஊராட்சி காம்பார்பட்டியில் புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்க பிரதிஷ்டை நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகா சங்கல்பம் வாஸ்துசாந்தி யாகசாலை பூஜை ஹோமங்கள், ருத்ரன் ஹோமம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4:30 மணி அளவில் கோபூஜை, நாடி சந்தானம், ரஷ்டபந்தனம், வேதிகா அர்ச்சனை, ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் உள்பட பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலை சுற்றி வலம் வரப்பட்டது.அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி அளவில் ஆத்மலிங்கேஸ்வரர், ஸ்ரீ மாதா புவனேஸ்வரி பரிவார தெய்வங்கள் மற்றும் 1008 சிவ லிங்கங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேகத்தை கிருஷ்ணகுமார் சுவாமிகள் நடத்தி வைத்தார். இதற்கு சிலுவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷமிட்டவாறு தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிலுவத்தூர், கம்பளியம்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×